பாலியல் தொழிலுக்காக உஸ்பெகிஸ்த்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள்! |

பாலியல் தொழிலுக்காக உஸ்பெகிஸ்த்தான் நாட்டிலிருந்து பல பெண்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கையின் மனித கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவர்கள் இவ்வாறு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.

தற்போது இந்தப் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பெரும்பாலான வெளிநாட்டு பெண்கள் அரசாங்க தங்குமிடங்களில் ஆதரவைப் பெறத் தயங்குகிறார்கள்,

அதற்குப் பதிலாக ஐ.நா. முகவர் நிலையங்கள் அல்லது தனியார் தங்குமிடங்களை விரும்புகிறார்கள் என்று அதிகாரி கூறினார். மேலும் இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு

தீர்ப்பு வழங்கப்படும் வரை 2 அல்லது 3 ஆண்டுகள் இலங்கையில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. சக்திவாய்ந்தவர்களின் ஆதரவுடன் இயங்கும் சில விபசார விடுதிகளுடன் உள்நாட்டு கடத்தல் தொடர்கிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews