யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் மாலைநேர கல்வி திட்டம் ஒன்று நேற்று பிற்பகல் 4:30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாம் செய்வோம் அமைப்பு அனுசரணையில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினரால் இணைந்து தொடக்கி வைக்கப்பட்ட குறித்த குறித்த மாலை நேர கல்வித்தில் தரம் 1 முதல் 5 வரையான நாற்பது மாணவர்கள் பங்கு கொண்டுள்ளனர்.
மகாத்மா சனசமூக நிலைய தலைவர் திரு யோகநாதன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்ட குறித்த மாலை நேர கல்வி திட்ட ஆரம்ப நிகழ்வில் மங்கல விளக்குகளை அரசியல் ஆய்வாளர் சி.ச.ஜோதிலிங்கம்,மருத்துவர் க.பவணந்தி, முன்பள்ளி ஆசிரியை திருமதி சுகந்தினி ஜெகதாசா, மாலை நேர கல்வித்துறையில் ஆசிரியை அருணா கந்தசாமி, கராத்தே யோகா ஆசிரியர் பே.வில்வம் உட்பட்ட பலரும் ஏற்றி வைத்தனர் தொடர்ந்து பிரதம அதிதிகளாக அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ ஜோதிலிங்கம்,மருத்துவர் கதிரேசு பவணந்தி, லைவ் பவுண்டேசன் நிறுவுனர் அல்பேட் பெஸ்ரியன், யோகா மற்றும் கராத்தே ஆசிரியர் பே.வில்வம், அல்வாய் வடக்கு கிராம அலுவலர் திரு அரவிந்தராம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சங்கீதன், சமூக விஞ்ஞான ஆய்வு மைய செயற்பாட்டாளர் திரு கமலகாந்தன், வடமராட்சி வலய முன்பள்ளி கல்வி பணிப்பாளர் திரு சத்தியசீலன், மாலை நேர கல்வித்திட்ட இணைப்பாளர் திருமதி கோபனா உட்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
குறித்த கல்வித் திட்டம் கல்வியில் மிகவும் ம பின்தங்கிய நிலையில் உள்ள மாலை நேர கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கான சுய கற்றலை ஊக்குவிக்கும் நோக்குடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுளதாகவும் இம் மாலை நேர கல்வித் திட்டத்தில் தற்போது தரம் ஒன்று முதல் ஐந்து வரை 40 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும். இம் மாலை நேர கல்வித்திட்டம் பிற்பகல் 4:00 மணி முதல் ஆறு மணிவரை ஞாயிறு தவிர்ந்த நாட்களில் இடம் பெறும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதே வேளை இக் கிராமத்தில் உள்ள மகாத்மா முன்பள்ளிக்கு லைவ் பவுண்டேஷன் நிறுவுனர் அல்பேட் பெஸ்ரியன் தனது சகோதரியின் பிறந்த தினமான நேற்று சமார் 40 ஆயிரம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கிவைத்ததுடன் ஓராயம் இயற்கை வேலலாண் சேவை அமைப்பு 120 வாழைக்குட்டிகளை மாலை நேர கல்வி கற்க்கும் மாணவர்களுக்கும், நேற்றை தொடக்க விழாவில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகளுக்கும் வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள், என சுமார் 150 பேர்வரை கலந்து கொண்டனர்.