கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்ப்பட்ட பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் இன்றையதினம் மதியம் 2.30 மணியளவில் சமையல் செய்து கொண்டிருந்த வேளை எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது
?
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
தனது சமயலறையில் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம் கேட்டதையடுத்து வீட்டிலிருந்து வெளியே ஒடிச் சென்ற பெண் தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாகவே வீட்டுக்கு வேலையிலிருந்த வருகை தந்த கணவர் அடுப்பின் ரேகுலொட்டரை அகற்றிவிட்டதாகவும், பின்னர் தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த போலீசார் அடுப்புவெடிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் தடையவியல் பொலிசாரும் சம்பவம் தொடர்பாக விசாரனைகள் மேற்கொண்டுள்ளதுடன் இராணுவத்தினரும் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுபதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கவிடையமாகும்.