முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் பகிர்ந்து உண்போம் 2022 என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் தாயகத்து நன்கொடையாளர்கள் மற்றும் புலம்பெயர் நன்கொடையாளர்களின் உதவியுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற 1400 குடும்பங்களிற்க்கு பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
2022இல் எமது மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நம்பிக்கையோடு தைத்திருநாளை கொண்டாடுவதுடன் அனைவருக்கும் இருப்பதனை பகிர்ந்து இனத்தின் இருப்பினை நிலைநிறுத்தும் ஆரம்ப முயற்சியாக தாயகம் எங்கும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவயாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளரா்