நாட்டில் ஒமிக்ரோன் பிறழ்வு வைரஸ் தாக்கம் தீவிரமடையலாம். என எச்சரிக்கை விடுத்துள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் சன்ன டி சில்வா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில், ஒமிக்ரோன் பிறழ்வு நாட்டின் முன்னணி கொவிட் வைரஸாக மாறக்கூடும் என அவர் மேலும் கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,மூட நம்பிக்கைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள் எனவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்தார். இந்த ஓமிக்ரோன் மாறுபாடு இலங்கை முழுவதும் வேகமாக பரவுவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருப்பதாக மரபணு ஆய்வுகளின் முடிவுகள் காட்டுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் சன்ன டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்