தமிழ்த் தேசியத்தை தமிழ்த் தேசியக் கட்சிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். சி.அ.யோதிலிங்கம்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கு
அனுப்பவிருந்த ஆவணம் பலத்த இழுபறிக்கு மத்தியில் முடிவு செய்யப்பட்டு
சனிக்கிழமை இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆவணத்தின்
உள்ளடக்கம் பற்றி இக் கட்டுரை எழுதும் வரை எதுவும் தெரியவில்லை. “தமிழ்
பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்”
என்ற தலையங்கம்தான் வெளியில் பேசுபொருளாகியுள்ளது. சமஸ்டிதான்
இறுதித் தீர்வாக இருக்க வேண்டும் என்றும் இடைக்காலத்தில் இலங்கை -இந்திய
ஒப்பந்தமும் அதன் அடிப்படையிலான 13வது திருத்தமும் முழுமையாக
நிறைவேற்றப்படல் வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளதாக
செய்திகள் வந்துள்ளன. தமிழரசுக்கட்சி சுமந்திரன் மூலம் தயாரிக்கப்பட்ட
ஆவணத்துடன் ரெலோ தயாரித்த ஆவணத்தின் சில பகுதிகளையும் சேர்த்து
இறுதிசெய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தலைப்பில் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகள் எனக்
கூறியபோதும் முஸ்லீம் தரப்பும் மலையகத் தரப்பும் கையெழுத்திடும்
செயன்முறையிலிருந்து விலகியுள்ளன. முஸ்லீம் தரப்பு விலகியமைக்கு
நியாயமான காரணங்கள் உண்டு. இலங்கை-இந்திய ஒப்பந்தம் வடக்கு-கிழக்கு
இணைப்பை தற்காலிகமாகவேனும் ஏற்கின்றது. வடக்கு-கிழக்கு மாகாணங்களை
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் எனக் கூறுகின்றது. முஸ்லீம்
மக்கள் பற்றி ஒப்பந்தம் பெரிதாக எதையும் கூறவில்லை. ஒப்பந்தம்
பற்றி எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. ஒருவகையில் அவர்கள்
மீது பலவந்தமாக திணிக்கப்பட்டது எனக் கூறலாம். தமிழ் மக்கள் மீதும்
திணிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் தமிழ் மக்களுடன் ஒரு கலந்துரையாடலாவது
இடம்பெற்றது. முஸ்லீம் மக்களுடன் அதுவும் நடக்கவில்லை. இதனால் முஸ்லீம் தேசியவாதத்தின் தோற்றத்திற்கு இலங்கை – இந்திய ஒப்பந்தமும் ஒரு
காரணமாகியது.

ஆனால் மலையகத்தரப்பிற்கு இதனை நிராகரிப்பதற்கு பெரிய
நியாயங்கள் இல்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தம் மலையகத்துடன் சம்பந்தப்படாத
விடயமாக இருந்தபோதும் பாதிப்பு எவற்றையும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் சக தேசிய இனம் என்ற வகையில் ஆதரவைக் கொடுத்திருக்கலாம்.
இது விடயத்தில் தொண்டமானின் கொள்கை நீட்சி கைவிடப்பட்டுள்ளது.
தொண்டமான் வடக்கு-கிழக்கு விவகாரத்தைப் பொறுத்தவரை அரசியல்
நிலைப்பாடுகள் மலையகத்திற்கு பொருந்தாத போதும் சக தேசிய இனம்
என்ற வகையில் அனைத்து அரசியல் நிலைபாட்டிற்றும் ஆதரவினைக்
கொடுத்தார். அதேபோல் வடக்கு – கிழக்கு தமிழ்த்தரப்பும் மலையக
மக்களின் முக்கிய போராட்டங்களுக்கு ஆதரவினைக் கொடுத்திருந்தது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் இந்த முயற்சி இந்தியாவிற்கு வலுவான
துரும்பைக் கொடுத்துள்ளது. இதனை வைத்துக்கொண்டு வழமைபோல இந்தியா தனது
நலன்களை மட்டும் அடைவதற்கு முயற்சிக்கும். தமிழ் மக்களிற்கு இதனால்
எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை.
இந்த முயற்சி தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகள் பல தவறுகளை
விட்டுள்ளன. அதில் முதலாவது தமிழ்த்தரப்பு தானே உருவாக்கிய
அரங்கத்திலிருந்து செயற்படுவதற்குப் பதிலாக இந்தியா உருவாக்கிய
அரங்கத்திலிருந்து செயற்பட முயன்றுள்ளது. இது முழுக்க முழுக்க
இந்தியாவின் நிகழ்ச்சி நிரல். இந்தியா முதலில் மாவை மூலம்தான் இதனை
அரங்கேற்ற முயற்சித்திருந்தது. மாவையின் முயற்சிகளை சம்பந்தனும்
சுமந்திரனும் குழப்பியமையால் பின்னர் ரெலோ மூலம் முயற்சித்தது.
முயற்சி பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக மனோ கணேசனையும்
ரவூப்ஹக்கீமையும் அரங்கத்திற்கு கொண்டு வந்தது. தங்கள் கையை மீறிப்
போகக்கூடாது என்பதற்காகவும்ரூபவ் இந்தியாவின் அழுத்தங்கள் அதிகமாக
இருந்ததினாலும் சம்பந்தன் இறங்கி வந்தார். சம்பந்தன் இறங்கி வந்தமைக்கு கொள்கைப் பிரச்சினை எதுவும் காரணமாக இருக்கவில்லை. தனது முக்கியத்துவம்
குறைந்துவிடும் என்ற அச்சமே காரணமாகும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்தியா தொடர்பான அணுகுமுறை
எதிரியாக்கவும் கூடாதுரூபவ் முகவராகவும் கூடாது என்பதே! இந்தியாவை கையாள்வதாக
இருக்க வேண்டும் .அந்தக் கையாளல் என்பது இந்திய நலன்களுக்கும் தமிழ்
மக்களின் நலன்களுக்குமிடையே பொதுப் புள்ளியைக் கண்டுபிடித்து அதனை
பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களுக்கென ஒரு அரங்கத்தை
உருவாக்கி அதனூடாக செயற்படும்போதே கையாளல் என்பது சாத்தியமாக
இருக்கும். இந்தியா உருவாக்கிய அரங்கத்தில் செயற்படும்போது முகவராக
இருக்க முடியுமே தவிர கையாளலை மேற்கொள்ளும் ஒரு தரப்பாக இருக்க
முடியாது. இதனை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திர குமாரனும்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாவது 13வது திருத்தத்தை அரசியல் தீர்வின் ஆரம்பப்
புள்ளியாக கொள்ளும் நிலையாகும். ஒற்றையாட்சிக்குட்பட்ட ஒரு
நிர்வாகப்பரவலாக்கல் பொறிமுறை எப்படி ஆரம்பப் புள்ளியாக
இருக்கும். 13வது திருத்தப்படி மாகாண சபைகளுக்கு சுயாதீனமான இருப்பு
எதுவும் கிடையாது. அதிகாரங்கள் சொற்பமாகவே வழங்கப்பட்டுள்ளன. அவை
கூட ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளதே தவிர மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட
மாகாணசபையிடமோரூபவ் மாகாண அமைச்சரவையிடமோ வழங்கப்படவில்லை. இது
பற்றி இக் கட்டுரையாளர் முன்னைய கட்டுரைகளிலும் கூறியிருக்கிறார்.
மூன்றாவது 13வது திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கொள்வது
என்றால் இந்தியப் பிரமருக்கு அனுப்பியுள்ள ஆவணத்தில் 13வது
திருத்தத்திற்கு திருத்தங்களை கோரியிருக்க வேண்டும். இங்கு நான்கு
திருத்தங்கள் மிக அவசியமானவை. மாகாணசபை நிரலிலுள்ள விடயங்களில்
சுயாதீனமான அதிகாரம் இருத்தல் ஒத்தியங்கு பட்டியலை இரத்துச் செய்து
அவற்றிலுள்ள அதிகாரங்களை மாகாணசபை நிரலில் உள்ளடக்குதல்ரூபவ்
ஆளுநரை பெயரளவு நிர்வாகியாக மாற்றுதல் அல்லது மாகாண
மக்களினால் தெரிவுசெய்யப்படும் நிலையை நிலைநிறுத்துதல்ரூபவ் வடக்குகிழக்கை இணைத்து தாயக ஒருமைப்பாட்டை உருவாக்குதல் என்பவையே இவ்
நான்குமாகும். இக் கட்டுரையாளர் இதுபற்றியும் முன்னைய கட்டுரையில்
கூறியிருக்கிறார்.

நான்காவது தமிழ் மக்கள் காலம் காலமாக பின்பற்றிய
கொள்கைகளில் இருந்து ஆவண முயற்சி விலகிச் செல்வதாகும். 1985ம்
ஆண்டு இடம்பெற்ற திம்பு மாநாட்டில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக
பின்பற்றிய கொள்கை வடிவம் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டது. தமிழ்
மக்கள் ஒரு தேசிய இனம்ரூபவ் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய
பிரதேசங்களரூபவ்; தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என அடிப்படை
கொள்கை வடிவம் வெளிப்படுத்தப்பட்டது.
இதற்கான யாப்புச் சட்டவடிவம்ரூபவ் தமிழ்ரூடவ்ழ விடுதலைப்புலிகளின்
இடைக்கால யோசனைரூபவ் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனைகள்ரூபவ்
வடமாகாண சபையின் தீர்வு யோசனைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன. எனவே
அவ்வாறான கொள்கைச் சட்ட ஆவணம் ஒன்றை முன்வைத்திருக்க வேண்டும் ஆனால்
இந்தியாவின் முகவர்களாக இருந்துகொண்டு மேற்கூறப்பட்ட கொள்கைச் சட்ட
ஆவணத்தை முன்வைக்க முடியாது.
ஐந்தாவது வரலாறு தந்த பேரம்பேசும் பலத்தை உச்சவகையில்
பயன்படுத்தாமையாகும். தற்போது இலங்கைத் தீவை மையமாக வைத்த புவிசார்
அரசியல் போட்டியினால் தமிழ் மக்களின் பேரம் பேசும் பலம்
வானளவு உயர்ந்துள்ளது. சீனா தமிழ் மக்களை நோக்கி வந்தமையே இந்த
உயர்வுக்கு காரணமாகும். தமிழ் மக்களுடைய கலாச்சாரம்ரூபவ் அடிப்படை
பொருளாதாரம் என்பவற்றை சீனா தன் கையிலெடுக்கும் முயற்சியை
தொடக்கியுள்ளது. இக் கட்டுரை வெளிவரும்போது சீன வெளிநாட்டு அமைச்சர்
இலங்கையில் இருப்பார். அவரும் நல்லூருக்கு மேற்சட்டை இல்லாமல்
வேட்டியுடன் செல்வதற்கு வாய்ப்பக்கள் அதிகம். தமிழ் மக்களின்
அடிப்படைப் பொருளாதாரங்களில் ஒன்றான கடற்தொழில்
அபிவிருத்தியில் மேலும் காலை அகல வைக்கலாம். சீன எதிர்ப்பு தமிழ்
அரசியல் வாதிகளின் வாயிலிருந்து வந்ததேதவிர தமிழ் மக்களின் அடி மனதிலிருந்து வரவில்லை. போர்க்காலத்தில் இரண்டு வல்லரசுகளும் தமிழ்
மக்களை ஒடுக்குவதில் சளைத்தவையாக இருக்கவில்லை.
இந்தியத் துணைக்கண்டம் தமிழர் தாயகத்திற்கு அருகில்
இருப்பதனாலும் தமிழக மக்கள் இந்தியாவிற்குள் வாழ்வதனாலும்
புலம்பெயர் மக்கள் மேற்குலகத்தில் வாழ்வதனாலும் அமெரிக்கா –
இந்திய அணியின் பக்கமே தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என்பது
யதார்த்தம்தான். அதற்காக சீனாவை எதிரியாக்கத் தேவையில்லை. சீனா ஒரு
உலக வல்லரசு அதன் சந்தை உலகம் தழுவியதாக உள்ளது. அதனை எதிரியாக்குவது
தமிழ் மக்களின் பொருளாதார நலன்களுக்கும் சாதகமானதல்ல. எனவே இந்த
இடத்தில் தமிழ மக்களின் பேரம் பேசும் பலத்தை முழுமையாக பயன்படுத்த
தமிழ்த் தேசியக் கட்சிகள் தவறியுள்ளது என்றே கூற வேண்டும்.
தமிழ்த் தேசிய அரசியலை பெரும்தேசியவாத சக்திகளிடமிருந்தும்
வல்லரசுகளிடமிருந்தம் பாதுகாப்பதற்கு முன்னர் தமிழத்தேசியக்
கட்சிகளிமிருந்து பாதுகாப்பதுதான் இன்று அவசர தேவை.
கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்த்தேசியத் தளத்தை
கட்யெழுப்புவதுதான் இதற்கான ஒரேவழி.

Recommended For You

About the Author: admin