யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் A-9 வீதியை முடக்கி இன்று காலை பாரிய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்திய மீன்வர்களின் அத்துமீறலைக் கண்டித்து 3 நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் யாழ்.மாவட்ட மீனவர்களுக்கு
உரிய தீர்வு இதுவரை கிடைக்காத நிலையில் அவர்கள் இன்று மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
அத்துடன் நாளை இலங்கையின் சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற விடாமல் போராட்டம் கடுமையாக இருக்கும் எனவும்
யாழ்.மாவட்ட மீனவர்கள் எச்சரித்தனர்.