இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துமீறும் இந்திய படகுகளை கைது செய்யகோரியும் உயிரிழந்த இரண்டு மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பொலிசார் மற்றும் போக்குவரத்து பொலிசாரின் ஏ9 வீதி ஊடாக வருகின்ற வாகனங்களை மாற்று பாதையில் செல்லுமாறு கூறி வருகின்றனர்