போக்குவரத்து கடமையில் தண்டம் விதித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கோடாரி கொத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவரது நிலைமை கவலைக்கிடமாக காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய நபரும் அவ்விடத்திலேயே நஞ்சு அருந்திய நிலையில், பொலிஸார் அந்நபரை பொறுப்பேற்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகவும், இதனை அவதானித்த குறித்த அதிகாரி அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட நபர் இவ்வாறு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது கோடரியால் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.