கிளிநொச்சி கண்டாவளை பிரதேச பொறுப்பு வைத்திய அதிகாரியாக கரைச்சி பிரதேச
பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளதாக
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை
தெரிவித்துள்ளது.
கண்டாவளை பிரதேசத்தின் மருத்துவ சேவைகளை இலகுப்படுத்தும் வகையிலும்,
நிர்வாக செயற்பாடுகள் இலகுவாக முன்னெடுக்கும் வகையிலும் இந் நியமனத்தை
மேற்கொண்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கண்டாவளை பிரதேசத்தின் மேலதிக பொறுப்பு வைத்திய அதிகாரியாக மருத்துவர்
பிரியந்தினி கமலசிங்கம் கடமையாற்றி வரும் நிலையில் இன்றைய (14) தினம்
மருத்துவர் கஜேந்திரா அவர்கள் கரைச்சிக்கு மேலதிகமாக கண்டாவளைக்கும்
நியமிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை
அறிவித்துள்ளது.