வடக்கில் மலோியா காய்ச்சல் அபாயம் தீவிரம்! 4 நோயாளர்கள் தீவிர சிகிச்சை பிரிவில், சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை.. |

வடமாகாணத்தில் மலோியா தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தொிவித்த சுகாதார அமைச்சின் மலோியா எதிர்ப்பு பரப்புரையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர இந்த தகவலை தொிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், 4 வாரங்களில் 4 மலோியா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் மட்டும் 2 வாரங்களில் 2 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 6 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும், குறித்த மலோியா நோயாளிகளில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும் கூறியுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews