கணபதி அறக்கட்டளையால் கல்விக்கான, வாழ்வாத, மலசலகூட உதவிகள், உணவுக்கான உதவிகள் என்பன நேற்று (19/02) வழங்கி வைக்கப்பட்டன
அந்த வகையில் வரணி வடக்கில் மூன்று பிள்ளைகளுடன் அடிப்படை மலசலகூடம் இன்றி குடிசையில் வசித்து வந்த குடும்பம் ஒன்றிற்க்கு மலசலகூட அமைக்க ரூபா 106,000/-வும்,
மனநிலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், கணவரை பிரிந்தும், மூத்த மகன் நோய்வாய்ப்பட்ட நிலையில் உள்ள குடும்பம் ஒன்றிற்க்கு மாதாந்த உணவு தொகையாக. 7052 ரூபாவும்,
பெற்றோர் இல்லாத திருகோணமலையைச் சேர்ந்த மாணவர்களிற்கு ரூபா 25,000 பெறுமதியான துவிச்சக்கர வண்டியும்,
யா/அல்வாய் சின்னதம்பி வித்தியாலய பாடசாலை சூழலில் துப்புரவு பணி மற்றும் மாணவர்களுக்கான சமையல் வேலைக்கான தை மாதத்திற்கான கொடுப்பனவாக ரூபா 10,000/- மும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன்,
2022 ம் ஆண்டு பாடசாலை செல்லும்
பெற்றோர் இல்லாத மற்றும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட வடக்கு கிழக்கு பகுதியிலுள்ள 400 மாணவர்களிற்கு பகுதி பகுதியாக கற்றல் உபகரணம் வழங்கும்
திட்டமும் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் திருகோணமலை தி/மூ/ கிளிவெட்டி மகாவித்தியாலய 20 மாணவர்களிற்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவ் உதவிகள் யாவும் புலம் பெயர் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வடமராட்சி