ரஷ்யாவிலிருந்து உடன் வெளியேறுங்கள்! – உக்ரைன் பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பு

ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளது.

ரஷ்யா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. இதனால் எந்த நேரத்திலும் ரஷியா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில்,பல நாடுகள் உக்ரைனில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில்,ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது. “உக்ரைனியர்கள் எக்காரணம் கொண்டும் ரஷ்யாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும், ரஷ்யாவில் உள்ள உக்ரைன் குடிமக்கள் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும்” என்று கூறியுள்ளது. எச்சரிக்கைக்கு செவிசாய்க்காத குடிமக்களைப் பாதுகாப்பது கடினமாக இருக்கும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin