மனைவிக்கு லீசிங்கில் மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்க உறவினரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவே வயோதிப பெண்ணை கோடரியால் தாக்கி கொலை செய்தாக யாழ்.இராசாவின்தோட்டம் பகுதியில் வயோதிப பெண் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன.
கடந்த செவ்வாய் கிழமை இராசாவின்தோட்டம் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்த 72 வயதான மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி என்ற பெண் அவருடைய வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினை மேற்கொண்டிருந்த யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி டில்ரொக் தலைமையிலான பொலிஸ் அணி
பிரதான சந்தேகநபரை நேற்று கைது செய்தனர். கைதானவர் யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் குடும்பஸ்த்தர் என தொியவந்துள்ளதுடன், மேலும் தான் சம்பவ தினத்திற்கு முதல் நாளும் அந்த வீட்டில் வேலை செய்ததாகவும், மறுநாளும் வேலைக்கு சென்றபோதே வயோதிப பெண்ணை பின்னால் சென்று தலையில் தாக்கியதாகவும் கூறியதுடன் சுயநினைவற்ற கிடந்த அவரிடமிருந்து தங்க சங்கிலியை அறுத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனது மனைவிக்கு லீசிங்கில் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளதாகவும் அதற்காக வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி கொடுப்பதற்காகவே அவ்வாறு செய்தாகவும் அவர் கூறியதுடன், பொலிஸாரிடம் அபகரித்த தங்க சங்கிலியை கொடுத்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன