பதுக்கல் வியாபாரிகளை கண்டறிய நாடு முழுவதும் விசேட சோதனை..!

நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கும் வர்த்தகர்களை கண்டறிய விசேட சோதனை நடவடிக்கையினை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது. 

சில வர்த்தகர்கள், பொருட்களை மறைத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews