இன்று காலை, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை – மாதகல் வீதியில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அச் சடலமாக உள்ளவரின் முகம் முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
எனினும் அவர் யார், எந்த இடத்தை சேர்ந்தவர், எவ்வாறு இறந்துள்ளார் என்ற எந்தவிதமான விபரங்களும் தெரியவரவில்லை.
இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.