யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வடமராட்சி கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல் விழா இன்று வல்லிபுரம் ஆழ்வார் ஆலய வளாகத்தில் சிறப்பாக சமய வழிபாடுகள் இடம்பெற்றது.
முதலாவது நிகழ்வாக பாரம்பரியமாக இடம்பெறுகின்ற பூசை வழிபாடுகள் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இடம் பெற்று அதனை தொடர்ந்து அமைக்கப்பட்டிருந்த கலாச்சார திடலில் பாரம்பரிய கலாச்சார விளையாட்டுக்கள் நான்கு வருட மாணவர்களுக்கு இடையிலும் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து வடமராட்சி விலையை கலைப்பீட மாணவர் ஒன்றிய மாணவர்களால் அன்னதானம் வழங்கப்பட்டு நிகழ்வு சிறப்புற முடிவு பெற்றது. கொரோனா இடர்காரணமாக இரண்டு வருடங்களாக இடம்பெறவிருந்த குறித்த பொங்கல் விழா இம்முறை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் வடமராட்சி வளைய முதலாம் வருட இரண்டாம் வருடம் மூன்றாம் வருட நான்காம் வருட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.