பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் தனியார் பேரூந்து ஒன்றின் பின்னால் சென்றவர் பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை ஏ9 வீதியில் யாழநோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்றின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் பேரூந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.கா யமடைந்தவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.