நாட்டில் மழை பெய்யும்வரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டும!

நாட்டில் மீண்டும் மழை பெய்யும் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாளை (8) முதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு காலம் மட்டுப்படுத்தப்படும்.

தேவையான எரிபொருள் இருப்புக்களை வழங்கினால் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும். நிலக்கரி கையிருப்பு தொடர்பில் எந்த கவலையும் இல்லை. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதில்லை. மின்வெட்டு அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைகளை மாத்திரமே ஆணைக்குழு அங்கிகரிக்கின்றது.

ஆணைக்குழுவால் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது என்ற எண்ணத்தில் சில பிரிவினர் உள்ளனர். ஆணைக்குழு தீர்மானங்களை எடுத்தாலும் மின்சார சபை வழங்கிய காரணிகள் மற்றும் தரவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுக்கின்றது. ரத்நாயக்கஇ மின்சார உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறையே மின்வெட்டுகளை அமுல்படுத்துவதற்கான கோரிக்கைகளின் பின்னணியில் உள்ள காரணங்களாக மின்சாரசபை மேற்கோள் காட்டியுள்ளது. அதற்கிணங்கவே நாம் அனுமதி வழங்குகின்றோம்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin