நியூயோர்க்கில் ரஸ்ய செல்வாக்கு பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டு பெண் ஒருவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க-ரஸ்ய இரட்டை பிரஜாவுரிமையை கொண்ட 61 வயதான எலினா பிரான்சன் என்பவருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர் மீது வெளிநாட்டு முகவராக தம்மை பதிவு செய்துக்கொள்ளவில்லை உட்பட்ட 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ரஸ்ய ஜனாதிபதி புடின் உட்பட்ட உயர் மட்டத்தினருடன் தொடர்புகளை கொண்டிருந்த இவர், அமெரிக்காவின் அடுத்த தலைமுறை தலைவர்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் 2020ஆம் ஆண்டு இவரை அமெரிக்க எப்பிஐ புலனாய்வு சேவையினர் விசாரணை செய்ததை அடுத்து, அவர் தலைமறைவானார் 2021ஆம் ஆண்டு ரஸ்ய ஊடகம் ஒன்றின் தகவல்படி, தாம் கைது செய்யப்படலாம் என்று அச்சத்தில் அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாக வழக்கு தொடுநர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்