இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலாளருக்கு கச்சதீவு செல்வதற்கான கோரிக்கை கடிதத்தை கொடுத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நா.வர்ணகுலசிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவுக்கு இந்திய கடற்றொழிலாளர்களும் வருகிறார்கள் என்பதால் அமைச்சர் மட்டத்தில் பேசி இந்திய கடற்றொழிலாளர்களுடன் சினேகபூர்வமாகப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்தோம். அதனால் 10 கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளின் பெயர் விவரங்களை நாம் யாழ் மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளோம். கச்சத்தீவுக்கு செல்வதற்கான மட்டுப்பாடுகள் காணப்படுவதால் தான் இதனை கடற்படையிடம் கையளிப்பதாகவும் தொலைபேசி மூலம் எங்களுக்கு பதில் கிடைக்கும் என்றார்.அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கச்சத்தீவுக்கு சென்று இந்திய கடற்றொழிலாளர்களுடன் ஒரு சிநேகபூர்வமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த தயாராக உள்ளோம்.இந்திய கடற்றொழிலாளர்களும் இலங்கை கடற்றொழிலாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி எந்தவித ஒரு முடிவையும் எட்டமுடியாது. இந்திய இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இருநாட்டு அமைச்சர்களும் பேசியே ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றார்.
இந்திய மீனவர்களுடன் கச்சதீவில் சிநேகபூர்வமாக பேச்சுவார்த்தை நடாத்த விரும்புகின்றோம்.யாழ் மீனவ சங்க பிரதிநிதிகள்….!
இந்திய கடற்றொழிலாளர்களுடன் கச்சதீவில் சினேகபூர்வமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த விரும்புகின்றோமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.