வடக்கு மாகாணத்தில் வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்லில் வாழ்ந்து வருவதாக 10 அமைப்புக்களை கொண்ட வடமாகாண பெண்களின் குரல் ஒன்றியம் அறிக்கை வெனியிட்டுள்ளது. மாரச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
மார்ச் மாதம் 8ம் திகதி உலகெங்கிலும் உள்ள பெண்கள் அனைத்து மனித குலத்திற்காகவும் பெற்ற வெற்றிகளை கொண்டாடும் வரலாற்று தினமாகும். இது எம்மனைவரினதும் பலத்தினால் பெற்றுக்கொண்ட வெற்றிகளானபடியால் நாம் அணைவரும்
ஒன்றிணைந்து இந்த தினத்தை கொண்டாட வேண்டும். ஆனால் போரினால் பாதிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால்
இடம்பெயர்ந்து வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வடக்கில் வாழ்கின்றனர்
என்பதை நினைவுபடுத்துவதற்கு இதனை சந்தர்ப்பமாக கொள்வோம்.
பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் விலையேற்றம், உணவு மற்றும் உரங்களின் தட்டுப்பாடு காரணமாக
மக்களுக்கு விவசாய காணிகளில் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்படுவதனால் ஏற்பட்டுள்ள தொழிலின்மை வாழ்வதற்கு
மக்களுக்குள்ள உரிமையை மேலும் வரையறை செய்கின்றன.
எனவே இன்று போன்று சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளிலும் மீண்டும் மீண்டும் இந்த பிரச்சினைகள் தொடர்பாக
நினைவுபடுத்த வேண்டிய நிலையில் பெண்களாகிய நாங்கள் வருத்தமடைகின்றோம்.
ஆனாலும் எமது துயரங்களையும், பட்டினியையும் பகிர்ந்து கொள்வதற்காக அரசியல் தலைவர்கள், ஆண்மிகத் தலைவர்கள்.
சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வட மாகாணத்தின் 4 கரையோர மாவட்டங்களிலுள்ள குடும்ப தலைமைத்துவ பெண்கள். இடம்பெயர்ந்த முகாம்களில் வசிக்கின்ற பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் என்ற ரீதியில் நாம் இந்த விடயங்களை உங்கள் முன் வைக்கின்றோம்.நாம் எமது குடும்பங்களை பாரமரிக்கும் பொழுது எமக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமைகள்
– வாழ்வதற்கான பிரச்சினைகள் தொடர்பாக
– மீள்குடியேற்றம் மற்றும் இடம்பெயர்ந்து முகாம்களில் நீண்டகாலமாக தங்கியிருப்பதனால் ஏற்பட்டுள்ள
பிரச்சினைகள் போன்றவற்றை தீர்ப்பதற்காக ஆவன செய்ய வேண்டும் என உங்கள் அனைவரிடமும் கேட்கின்றோம்.
ஆனாலும் குடும்ப தலைமைத்துவ பெண்களைப் போலவே இடம்பெயர்ந்த மக்களாகிய நாம் எமது வேதனையை மட்டும் உங்கள் முன்னிலையில் வைப்பதற்கு நாம் விரும்பவில்லை. எனவே இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒன்றிணைந்து தலையிடுவதற்கு நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதனையும் சகோதரத்துவத்துடன் இதில் குறிப்பிடுகின்றோம்.
25 வருடங்களுக்கு மேலாக போருக்கு பயந்து ஆதரவற்று பட்டினி தாகம் என பாதிக்கப்பட்டுள்ள நாம் எமது பிள்ளைகள்
மற்றும் கணவனை இழந்தாலும் மிகவும் தைரியத்துடன் எமது வாழ்க்கையை கொண்டு சென்றோம். யுத்தம் முடிந்தவுடன் எமது
வாழ்க்கைக்கு ஏதாவது மாற்றம் ஏற்படும் என நம்பினாலும் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்
எமது வாழ்வு மாறும் என நம்புகின்ற போதிலும் நீதி சமத்துவம் ஆகியவற்றை மதிக்கும் நாட்டில் அமைதியான
மக்களுக்கு இது பொருத்தமானதா? என ஒடுக்கப்பட்ட பெண்களாகிய நாம் கேள்வி எழுப்புகிறோம்.
ஒரு குடும்பமாக எமது அன்புக்குரிய கணவன் பிள்ளைகள் எமக்கு இழக்கப்பட்டாலும் எமது ஏனைய பிள்ளைகளுக்கு சிறந்ததொரு
எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுப்பது எமது கடமை என்பதை நாம் நம்புகின்றோம். அவர்களுக்கு சிறந்ததொரு கல்வியை
வழங்குவது மிக முக்கியமாகும். அதன் ஊடாக அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான வசதிகளை வழங்க வேண்டும். சமூகத்தில் ஏனைய பெண்களைவிட பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள எம்மீது அதிக கவனத்தை செலுத்தி எமது மற்றும் எம்பிள்ளைகளின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை முறைக்கு ஒரு
பலமாக இருக்க வேண்டுமென அதிகாரத்திலுள்ள அனைவரிடமும் நாம் கோருகின்றோம். இதற்காக வடமாகாண பெண்களின் குரல்
எனும் ஒன்றியம் என்ற ரீதியிலும் அதன் அங்கத்துவ அமைப்புகளின் அங்கத்தவர்கள் என்ற ரீதியிலும் இந்த
கடிதத்தில் கைச்சாத்திடும் நாம் இவ்விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அதன் மூலம் குடும்ப தலைமைத்துவ பெண்கள் மற்றும் இடம்பெயர்ந்த பெண்கள் என்ற வகையிலும் மனித கண்ணியத்துடன் கூடிய மரியாதைக்குரிய குடிமக்கள் என்ற வகையிலும் எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் அமைதியான வாழ்க்கையை நடத்த
ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பூந்தளிர் மாவட்ட பெண்கள் அமைப்பு – யாழ்ப்hணம்
தென்றல் மாவட்ட பெண்கள் அமைப்பு – முல்லைத்தீவு
வளர்பிறை மாவட்ட பெண்கள் அமைப்பு – மன்னாரம்
அரும்பு மாவட்ட பெண்கள் அமைப்பு – கிளிநொச்சி
யாழ்பாணம் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
முல்லைத்தீவு மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
கிளிநொச்சி மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
மன்னார் மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு