மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ள மூன்றாவது ரஷ்ய மூத்த இராணுவ அதிகாரி இப்போது உக்ரைனில் கொல்லப்பட்டதாக மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனில் ரஷ்யா சுமார் 20 மேஜர் ஜெனரல்களை வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர், கடந்த மாதம் 24ம் திகதி படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அவர்களில் மூன்று பேர் இப்போது கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் நடந்த முழு மோதலின் போதும் மூன்று ரஷ்ய மேஜர் ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்.
சூழ்நிலை விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலோ அல்லது வீரர்கள் முன்னோக்கிச் செல்வதற்கு அஞ்சுவதால், மிக மூத்த அதிகாரிகள் “முன்னால் இருந்து வழிநடத்த” முயற்சிப்பதாக மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மதிப்பீட்டின்படி உக்ரேனில் 5,000 முதல் 6,000 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக மேற்கத்திய அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, ரஷ்யாவின் படைகள் தளவாடங்கள் மற்றும் விநியோகங்களில் தொடர்ச்சியான சிக்கல்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றங்களைத் அடைந்துள்ளனர். இன்னும் கடுமையான உக்ரேனிய எதிர்ப்பைச் சந்தித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.