புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் மரணம்.

மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் 80 ஆவது வயதில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

சேகுவேராவை கொல்ல முயன்றபோது அவர், நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல்படுங்கள் என ஆறுதல் கூறியதாக அவரை சுட்டுக்கொன்ற மரியோ தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேரா பனிப்போர் காலத்தில் பொலிவியா நாடுகளில் அந்த நாட்டு இராணுவத்துக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்ட நிலையில், கம்யூனிஸ்டுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டிருந்த பொலிவியா அதிபர் ரேனே பாரியன்டோஸ், சேகுவேராவை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டார்.

இராணுவ வீரர் மரியோ டெரான் சலாசர் என்பவருக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்ட நிலையில், இராணுவ வீரர் மரியோ, சேகுவேராவை சுட்டுக்கொன்றார்.

30 ஆண்டுகள் பொலிவியா இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மரியோ அதன்பிறகு பத்திரிகையாளர்களின் பார்வையில் இருந்து ஒதுங்கி அமைதியாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது 80 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin