குறிகட்டுவான் இறங்குதுறை யாருக்கு சொந்தம்?யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் மீளாய்வு கூட்டத்தில் குழப்பம்.

யாழ்ப்பாணம் -தீவகம் பிரதான வீதி மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வு குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டதை யடுத்து குறித்த இறங்குதுறையானது வீதி போக்குவரத்து அதிகாரசபைக்கு சொந்தமானதா அல்லது வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானதா என குழப்ப நிலை ஏற்பட்டதோடு பல மணிநேரம் குறிகட்டுவான் இறங்குதுறை யாருக்குச் சொந்தமானது என சினிமா பாணியில் ஒருங்கிணைப்பு குழுவின் இணைதலைவர் மற்றும்அதிகாரிகளால் விவாதிக்கப்பட்டது

எனினும் குறிகட்டுவான் இறங்கு துறையின் புனரமைப்பினை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பொறுப்பெடுத்து அதனை புனரமைப்பது தொடர்பில் உரிய அமைச்சுக்கு தெரியப்படுத்துமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரால் இறுக்கமாக தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin