இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தடைகளுக்கு மத்தியில் பங்குபற்றிய இலட்ச கணக்கான மக்களுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் மனபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோன்று மக்களுக்கான வேலைத்திட்டத்தை மக்கள் முன்கொண்டு சென்று அறிவுறுத்திய அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும் சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளின் மூலம் மக்கள் அடையும் துயரத்துக்கு எதிரான மக்கள் எழுச்சியின் ஆரம்பமே இந்த போராட்டம் என்பது தெட்ட தெளிவாகிறது. அரசாங்கம் மக்கள் கூடுவதை தடுப்பதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளையும் மக்களின் அர்ப்பணிப்புடன் தவிடுபொடி செய்ய முடிந்தது.
போராட்டத்துக்கு முன்பு எரிபொருள் விநியோகத்தை தடுத்ததுடன் போராட்ட நாளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறான அனைத்து சவால்களையும் வெற்றிக்கொள்வதற்கு மக்களால் முடிந்தது. தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளின் ஊடாக மக்கள் முகங்கொடுக்கும் நெருக்கடிகள் ஏனையவற்றுக்கு பெரும் சவாலாக அமைந்தமையே போராட்டத்தின் மீது விடுக்கப்பட்ட சவால்களை மக்கள் வெல்வதற்கு காரணமாக அமைந்தது.
இதற்கு மேலும் தற்போதைய நிலைமையில் இருந்து நாட்டை காப்பதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் முடியாது என்பது மக்கள் அணிதிரண்டமையின் ஊடாக புலப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி குறித்த மக்கள் எழுச்சியை முன்நோக்கி கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கும். தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு இந்த போராட்டத்தை கிராம மட்டத்தின் போராட்டமாக மாற்றுவோம் என சுட்டிக்காட்ட விருப்புகின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.