முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஐயன்கன்குளம் மகா வித்தியாலம் புலமைப் பரிசில் பரீட்சையில் 100 வீத சித்தியடைந்து சாதித்துள்ளது
2021 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் ஐயன்கன்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் 12 பேர் தோன்றியிருந்தனர்
இந்நிலையில் வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பரீட்சையில் தோற்றிய நான்கு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதோடு பாடசாலை 100 வீத சித்தியடைந்து சாதித்துள்ளது
அந்தவகையில் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பரீட்சையில் தோற்றிய கு.சயந்தன் 166,யோ.டினுசிகா 163, ர.பவிசனா 162,இ.ஜெயஹர்சினி 152 புள்ளிகளை பெற்றுள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 147 ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு சாதிக்க காரணமான அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களை ஐயன்குளம் கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்