யாழ்.நல்லுார் சிவன்- அம்மன் கோவிலில் வழிபாடு நடத்த சென்றவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்!

யாழ்.நல்லுார் சிவன் – அம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்த சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

நேற்று  வியாழக்கிழமை காலை கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு சென்றிருந்த நிலையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் உயிரிழந்து 6 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் நேற்று மதியம் வரை சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவில்லை. பின்னர் கோப்பாய் போலீசார் நீதிபதி பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews