கலாச்சார மத்திய நிலையம் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது..! திறந்துவைக்கும் விருந்தினர்கள் குறித்த தகவல் இரகசியமாக.. |

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்.பொது நுாலகத்தின் அருகில் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாச்சார நிலையம் நாளை மறுதினம் திங்கள் கிழமை திறந்துவைக்கப்படவுள்ளதாக இந்திய துாதரகத்தால் யாழ்.மாநகரசபைக்கு தொியப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நிகழ்வு எத்தனை மணிக்கு இடம்பெறும்? பங்குபற்றுவது யார்? என்பனபோன்ற தகவல்கள் யாழ்.மாநகரசபைக்கு தொியப்படுத்தப்படவில்லை. இதேவேளை இந்திய பிரதமர் மோடி இந்தியாவிலிருந்தும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் இருந்தும்

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் இருந்தும் தொழிநுட்ப ரீதியாக இந்த நிலையத்தை திறந்துவைக்கலாம். என அறிய முடிகின்றது. 2016ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2020ம் ஆண்டு நிறைவடைந்துள்ளன.

இந்த கலாச்சார நிலையத்தை யார் பராமரிப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டது. அதற்கு இன்னமும் தீர்வு  எட்டப்படாத நிலையில் இந்திய துாதரகம் யாழ்.மாநகரசபை நிகழ்வு ஏற்பாட்டுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews