முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த வருட இறுதியில் அமெரிக்க டொலர் 450 ரூபாவை அடைவதை எவராலும் தடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தின் வணிக கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கை உணவு உட்பட அதிக பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு நாம். அரசாங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தியிருந்தாலும், அது தோராயமாக 22 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்கிறது.
அந்த வகையில் 230 ரூபாவில் இருந்த அமெரிக்க டொலர் தற்போது 300 ரூபாவ உயர்ந்துள்ளது. அதனால், மேலும் 20 மில்லியன் ரூபா செலவிட வேண்டியுள்ளது. அந்தத் தொகையும் மக்களோலேயே செலுத்தப்படுகிறது.
தற்போது இலங்கையின் பணவீக்கம் ஆசியாவிலேயே அதிக பணவீக்கமாக பதிவாகி 17 சதவீதத்தை தாண்டிள்ளது. இதேவேளை, இன்று வங்கி அமைப்பு சீரழிந்து வருகிறது. நமது வங்கி அமைப்பில் ஒரு வங்கி சரிந்தால், ஒட்டுமொத்த வங்கி அமைப்பும் சரிந்து நமது பொருளாதாரத்தின் முடிவாகிவிடும்.
நாட்டின் பணவீக்கம் 17 சதவீதமாக உள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக சாதகமற்ற ஒப்பந்தங்களை செய்து வெளிநாடுகளுக்கு சொத்துக்களை கொடுக்க அரசு முயற்சிக்கும். ஆனால், மக்கள் வீதிக்கு இறங்கினால் அரசால் கட்டுப்படுத்த முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.