நேற்றையதினம் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு முழுவதும் பரவிய இந்தப் போராட்டத்தில் ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியிலும் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது கூடிய பொதுமக்களை விரட்டியடிக்க கண்ணீர்புகை, நீர்த்தாரை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.பதிலுக்கு மக்களும் கையில் கிடைத்த பொருட்களை எறிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன் போது அந்தப் பகுதியில் தரித்து நின்றிருந்த இராணுவத்தினருக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டதாகத் தெரியவுருகின்றது.
இதேவேளை, அந்த சுற்றுவட்டப் பகுதிகளை மக்கள் முற்றாக முடக்கியுள்ளனர் என்றும் அறிய வருகின்றது.