ஐக்கிய மக்கள் சக்தியிகன் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட் டது.
கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, ஏ9 வீதி வழியாக டிப்போ சந்திவரை சென்ற போராட்டக்காரர்கள் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஜனாதிபதி கோட்டபாஜ ராஜபக்சவை பதவி விலகுமாறு தெரிவித்து கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தது. குறி்த்த போராட்டத்தின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் வைத்தியர் விஜயராஜன், மாவட்ட அமைப்பாளர்களான மரியசீலன், ரஞ்சன் ஆகியோர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.