வடமராட்சி தனியார் சிற்றூர்தி சேவை சிங்கத்தின் கீழ் சேவையில் ஈடுபடும் சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊடாக எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் பேருந்துகளுடன் நீண்டநேரமாக காத்திருந்து எரிபொருள் பெற்று பயணிகளுக்கான சேவை வழங்கிக் கொண்டிருக்கும் வடமராட்சி தனியார் போக்குவரத்து சேவை சங்கத்திற்ஜ்கு இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலையிலிருந்து எரிபொருள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமகஙு உரிய காலத்தில் எரிபொருள் வழங்குவதில்லை எனவும், வேண்டு மென்றே சாலை நிர்வாகம் செயற்படுவதாகவும் இதனால் பல இன்னல்களை சந்திப்பதாகவும் தனியார் போக்குவரத்து சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதே வேளை இது தொடர்பில் பருத்தித்துறை சாலை முகாமையாளர் சாலையில் இல்லாத நிலையில் அவரிடம் தொலைபேசியில் குறித்த தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேட்டபோது குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், தனியார் போக்குவரத்து சேவை சங்கத்திற்கு தங்களுககு மூன்று நாளுக்குரிய டீசல் இருப்பு வைத்துக்கொண்டு மேலதிகமாக இருந்தால் மட்டும வழங்குமாறும், இவ்வளவுதான் வழங்க வேண்டும் என்று வரையறை இல்லை என்றும், அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் குறித்த தனியார் போக்குவரத்து சேவை சங்கம் பருத்தித்துறை சாலையிலிருந்து எரிபொருளை பெற்று கொண்டாலும் பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பது குறிப்பிட தக்கது.