நெல்லியடி  மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி  நெல்லியடி  மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில்  கல்வி கற்று தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு  பாலச்சந்திரன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பாடசாலை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு பின்னர் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வாழ்த்துரைகளையும் பரிசில்கள் மற்றும் கேடயம் பதக்கம் என்பவற்றை நிகழ்வின் பிரதம விருந்தினரும் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தருமாகிய பேராசிரியர் சி ஸ்ரீ சற்குணராஜா
வடமராட்சி வலய  திட்டமிடல் பிரதி கல்வி பணிப்பாளர் செல்வி ஜனனி,
 சட்டத்தரணியும் பாடசாலையின் பழைய மாணவனுமாகிய நடா  ரஜீவன், கரவெட்டி கோட்டக்கல்வி அதிகாரி வெஎ.புவனேந்திரராசா, நெல்லியடி மத்திய கல்லூரி ஓய்வு பெற்ற அதிபர் கலாநிதி  செ.சேதுராசா,  முன்னாள் நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ந.தேவராசா,  சின்னதா  வள்ளியம்மை அறக்கட்டளை இயக்குனர் சி.கிருஷ்ணமூர்த்தி, நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி  உடபட பலரும் வழங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், அயல்பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் யாழ் பலாகலைக்கழக துணை வேந்தர் பொன்னாடை போர்த்தி பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கபட்துடன், புலமை பரிசில் பரீட்சைக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews