கிளிநொச்சி மாவட்டத்தில், இன்று பகல் பெய்த கன மழை காரணமாக, பல பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று பகல் 1.00 மணி முதல் 2.30 மணி வரை கொட்டித்தீர்த்த மழை காரணமாக, வீதிகள் மற்றும் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் நிரம்பியிருந்தன.
சில பகுதிகள் ஊடான போக்குவரத்திற்கும், மக்கள் சில மணி நேரம் சிரமமடைந்தனர்.
கிளிநொச்சி நகர பகுதிகளின் சில இடங்கள், வெள்ள நீரினால் தேங்கியிருந்தன.
கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட கடும் வெப்ப நிலைமையில், தற்போது பெய்துள்ள மழை, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கிளிநொச்சி இரணைமடு பகுதியில், 26.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.