வைத்தியசாலையில் நோயாளி முன் மேசையில் கால் போட்டு அமர்ந்திருந்த வைத்தியர்..! காரணம் இதுதானாம்.. |

கிளிநொச்சி – அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் நோயாளி அருகில் இருக்கும்போது தனது இரு கால்களை மேசையின் மேல் வைத்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றது. 

இது தொடர்பாக வடமாகாண சுகாதார சேவையில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவரை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு கேட்டபோது, கஷ்ட பிரதேசத்தில் அர்ப்பணிப்பு மிக்க சேவையினை வழங்கும் குறித்த வைத்தியர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்து சேவையாற்றி வருகின்றார். மேலும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வைத்தியர் காலில் காயம் ஒன்று ஏற்பட்டுள்ளதால் அதற்கு மருந்து போட்டதன் பின்னர் காலை சமாந்தரமாக வைத்திருப்பதற்காக காலை மேசையில் வைத்துள்ளார்.

வைத்தியருடைய அத்தகைய நடவடிக்கை விரும்பத்தக்கதாக இல்லாதபோதும் வைத்தியர்கள் பற்றாக்குறையுள்ள பின்தங்கிய பிரதேசத்தில் அதிகளவான மக்கள் தினசரி சேவை பெறும் வைத்தியசாலையில் விடுமுறை இல்லாமல் பணியாற்றும் வைத்தியருடைய சேவை விமர்சத்திற்கு அப்பாற்பட்டது என கூறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews