நாளை புதன்கிழமை நாட்டில் சகல பாடசாலைகளும் நடைபெறும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆசிரியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து செல்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் நாளை புதன்கிழமை தேசிய போராட்ட நாளாக அறிவித்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு 300 தொழிற்சங்கள் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து பாடசாலைகள் நடைபெறுமா இல்லையா என்பதில் குழப்ப நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என்றும் ஆசிரியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து செல்வர் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.