கேகாலை – ரம்புக்கனை வன்முறைச் சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையான பொலிஸ்மா அதிபர்..!

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்திருந்த அழைப்பிற்கு அமைய பொலிஸ்மா அதிபர் இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிிழந்ததோடு,

பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்ட நபர் மற்றும் துப்பாக்கி ரவைகளை பயன்படுத்தியதற்கான காரணத்தினை கண்டறிய விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,

கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தற்போது முன்னிலையாகியுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews