மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தினால் 200 குடும்பங்களிற்கு உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
நேற்று காலை 11.30 மணியளவில் குறித்த உலருணவு பொதிகளின் ஒரு பகுதி மாவட்ட செயலகத்தில் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன், கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன், உதவி அரசாங்க அதிபர், மாவட்ட இடர்முகாமைத்துவ நிலைய பணிப்பாளர், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த உலருணவு பொதிகள் 3500 ரூபா பெறுமதியானது எனவும், கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களிற்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.