யாழ்.நகரில் இளைஞனிடம் நுாதன வழிப்பறி..! இருவரை மடக்கியது பொலிஸ் புலனாய்வு பிரிவு…!

யாழ்.நகரில் வீதியால் செல்பவர்களை வழிமறித்து அச்சுறுத்திக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நகரை அண்டிய பகுதியில் வீதியால் வந்த இளைஞன் ஒருவனிடம் சுமார் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியன கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பழைய பூங்கா வீதியை சேர்ந்த மேற்படி இளைஞனை வழிமறித்த வழிப்பறி கொள்ளையர்கள் தமது சகோதரியுடன் கதைப்பதாகவும் அவருடைய புகைப்படத்தை பேர்ஸில் வைத்திருப்பதாகவும் கூறி அச்சுறுத்தியுள்ளனர்.

பின்னர் இளைஞனிடமிருந்த 6 ஆயிரம் பணம் மற்றும் பெறுமதியான தொலைபேசியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இளைஞன் வழக்கிய முறைப்பாட்டில் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இதேபோல் கடந்த ஒருவார காலத்திற்குள் ஏற்கனவே 3 வழிப்பறி சம்பவங்கள் யாழ்.மாநகரில் இடம்பெற்றிருக்கின்றது. இது 4வது சம்பவமாகும். இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்திய பொலிஸார்,

22 மற்றும் 24 வயதுடைய இருவரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். 

Recommended For You

About the Author: Editor Elukainews