யாழ்.மண்டைதீவில் அதிநவீன தொழிநுட்பங்களுடன் கூடிய கடல்பாசி வளர்ப்பு திட்டம்..!

யாழ்.மண்டைதீவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய கடல் பாசி வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இந்திய தனியார் முதலீட்டாளர்களுடன் நேற்று இடம்பெற்றுள்ளது. 

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றிருந்த குறித்த பேச்சுவார்த்தையின்போது  இந்தியாவில் இருந்து கிடைக்கும் காலத்தின் தேவை உணர்ந்த ஒத்துழைப்புக்களை நினைவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்த 

பொருளாதார சவால்களில் இருந்து மீள்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு இந்தியா பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.

இந்நிலையில், இலங்கையில் காணப்படுகின்ற வளங்களை இனங்கண்டு நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி விருத்தி செய்வதன் மூலம் நிலையான பொருளாதார நன்மைகளை உருவாக்குவதற்கு இந்திய தனியார் முதலீட்டாளர்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

அந்தவகையில், மண்டைதீவு உட்பட வடக்கு மாகாணத்தில் பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு கடல்பாசி செய்கையை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் கடற்றொழில் அமைச்சு வழங்கும் என்று தெரிவித்தார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்கா மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர்,

நக்டா நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews