தீம்புனல் வாராந்த பத்திரிகையின் ஓராண்டு நிறைவு நேற்றைய தினம் பருத்தித்துறையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 10:30 மணியளவில் தீம்புனல் பத்திரிகையின் ஆசிரியர் சூரன் ஏ ரவிவர்மா தலமையில் மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது. மங்கல விளக்குகளை வல்லிபுரம் குருக்கட்டு பிள்ளையார் ஆலய பொருளாளர் திரு.சாந்தலிங்கம், நிகழ்வின் பிரதம விருந்தினர் மூத்த ஊடிவியலாளர் திரு.வித்தியாதரன், தீம்புனல் நிர்வாக இயக்குநர் சா.வினோதன், தீம்புனல் ஆசிரியர் ஏ ரவிவர்மா, ஊடகவியலாளர் அ.வில்சன், ஜீவநதி ஆசிரியர் க.பரணீதரன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் வேல்.நந்தகுமார், உட்பட பலரும் ஏற்றினர்.
இதில் கருத்துக்களை நிகழ்வின் பிரதம விருந்தினர் திரு.வித்தியாதரன், உட்பட பலரும் நிகழ்த்தியதுடன் ஐம்பதுஆண்டுகளுக்கு மேல் ஊடக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் திரு.தில்லைநாதன், மூத்த ஊடகவியலாளர் திரு.வித்தியாதரன்,
உட்பட பலரும் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் ஊடகவியளாளர்கள், வாசகர்கள், ஊழியர்கள், உறவுகள் என பலரும் கலந்து கொண்டனரவ