அனைத்து தொழிற்சங்களினது மே தின ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு ரீகல் சுற்றுவட்டத்துக்கு முன்பாக ஆரம்பமாகி கொழும்பு பொதுநூலகம் வரை சென்றது.
ஆசிரியர் சங்கம், சுகாதார சங்கம், தபால், தொலைத்தொடர்பு சேவைகள், இறக்குமதி, ஏற்றுமதி தொழிற்சங்கங்கள் என சகல தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த மே தின ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்கு செய்துள்ளன.
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பேரணியில் சுகாதார ஊழியர்கள் சம்மேளனத்தின் ஒருங்கமைப்பாளர் ரவி குமுதேஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு பொதுநூலகத்துக்கு அருகில் தொழிற்சங்கங்களின் கூட்டமும் இடம்பெற்றது.