உதவிக் கல்விப் பணிப்பாளர் து.பாரதி பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட 38 பாடசாலைகளைச் சேர்ந்த கணித பாட ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இம்முறை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 154 பாடசாலைகளைச் சேர்ந்த 7923 மாணவர்களுக்கு இச் செயலமர்வு நடாத்தப்படவுள்ளது.
தரம் – 5 , சாதாரண தரம் மற்றும் உயர்தரும் எழுதவிருக்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிரித்தானியா, சைவ முன்னேற்றச் சங்கத்தினால் விசேட செயலமர்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல கல்விச் சேவைகளை வழங்கி வரும் பல சமூக, சமய மற்றும் கல்விச் சேவையை செய்துவரும் சைவ முன்னேற்றச் சங்கத்தின் 45வது ஆண்டு இம்முறை லண்டனில் கொண்டாடப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
;