அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம இன்று வன்முறையாக மாறியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மிகவும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த போராட்ட களத்தில் நேற்று குண்டர்கள் களமிறங்கி போராட்டகாரர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியிருந்தனர். அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களே தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதனால் கொழும்பில் வன்முறை வெடித்தது. இந்நிலையில், அரச ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மக்கள் தாக்க தொடங்கினர்.
அவர்களை அழைத்து வந்த வாகனங்கள் தாக்கப்பட்டதுடன், தீ வைக்கப்பட்டன. வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட குண்டர்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தினர். அரசாங்கத்தின் முக்கிய நபர்களின் வீடுகள் தீ வைக்கப்பட்டுள்ளன.
வாகனங்களும் எரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, குறித்த வன்முறை சம்பவங்களுக்காக சிறையிலிருந்து கைதிகள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான குண்டர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமுர்த்தி பயனாளர்களும் அச்சுறுத்தி அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.