நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை நாடாளுமன்றத்தை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளைய தினம் இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.