
அதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் பெட்ரோல் நிரப்புவதற்காக மக்கள் தமது வாகனங்களில் காத்திருந்து எரிபொருள் நிரப்புவதையும் அவதானிக்க முடிந்தது.
நுகர்வு பொருட்களான பால் மா, எரிவாயு, மண்ணெண்ணெய், தீப்பெட்டி போன்ற முக்கியமான பொருட்கள் விலை உயர்ந்த நிலையிலும் வடமராட்சிப் பகுதியில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
பயிற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பயிர்களை பராமரிக்க முடியாமலும்,
பயிற்செய்கையில் ஈடுபட இருப்பவர்கள் மண்ணெண்ணெய் உரம் இல்லாத காரணத்தினால் பயிர்செய்கையில் ஈடுபட முடியாத நிலையிலும் உள்ளனர்.
மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலும் தற்போதைய காலநிலை மாற்றத்தினாலும் மீனவர்கள் பல நாட்களாக கடலுக்கு செல்ல முடியாத நிலையில், தங்களுடைய வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர்.