எரிபொருள் நிரப்ப இரவு பகலாக காத்திருக்கும் விசுவமடு மக்கள்….!

எரிபொருள் பெறுவதற்காக இரவு பகலாக காத்திருக்க  வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விசுவமடு  மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான நெருக்கடி நிலைமை காரணமாக  நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படாத  காரணத்தினால் எரிபொருள் பெறுவதில் மக்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் எரிபொருள் பெற வேண்டுமாயின் அதிகாலை 2 மணிக்கு எழுந்து வரிசையில் நின்று காலை 10 மணி அளவில் எரிபொருள் பெறவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமது நாளாந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் 14.05.2022 இன்றைய தினம்  முலலைத்தீவு
மாவட்டத்துக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 கிலோ மீற்றர்ருக்கும் அதிகமான தொலைவில் மிக் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெறவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்.
காலை  தேனீர் கூட அருந்தாமல் பல மணி நேரம் காத்திருந்து எரிபொருளை பெறவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளனர்.
விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை 7 மணிக்கு பின்னரே எரிபொருள் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வந்தவுடன் மக்களுக்கு உடனடியாக தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மக்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews