காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது.

கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட வன்முறையின்போது, இளைஞரொருவரை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

சதா நாலக்க என்றழைக்கப்படும் 43 வயது நபரே கொழும்பு ஹோக்கந்தர பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஹோக்கந்தர பிரதேசத்தில் தனது வீட்டில் மறைந்து இருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முன்னாள் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் உறவினர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 09ஆம் திகதி அலரிமாளிகையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றத் தரப்பினர், கொழும்பு காலிமுகத்திடல், அலரிமாளிகை என்பவற்றுக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் மீது தாக்குதலை நடத்தினர்.

இதன்போது காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குறித்த இளைஞர் மீது சந்தேக நபர் இரும்புக் கம்பியால் தாக்கும் காட்சியானது அப்பகுதியிலிருந்த சீசிடிவியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews