பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்படும். என எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க கூறியுள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு மூடப்படவிருந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 2 மணி வரை எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றது.
அவ்வாறிருக்க வரிசையில் நின்றவர்கள் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் கீழ்ப்படியாமல் 3.30 மணி வரை எரிபொருளை விநியோகிக்குமாறு பலவந்தமாக கேட்டுள்ளதாகவும் கூறிய அவர்,
இதேநிலை நீடித்தால், இந்த சேவையை தொடர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நேற்றய தினம் சிலாபம் பகுதில் எரிபொருள் விநியோக வாகனங்களை மறித்து கும்பல் ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.